சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்- ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு இதுவரை 96 லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், இதுவரை 87 லட்சத்து 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மே மாதத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளில் 1 லட்சத்து 47ஆயிரம் வர வேண்டி உள்ளதாகவும், இது நாளை வரும் என எதிர்பார்க்கபபடுவதாகவும் கூறினார்.
மேலும், ஜூன் மாதத்திற்கு 48 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கான முதல் தவணை ஜூன் 6ம் தேதி தான் கிடைக்கும என்பதால் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.