ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

Lockdown covid vaccination pmmodi centralgovernment OmicronInIndia பிரதமர் மோடி
By Petchi Avudaiappan Dec 25, 2021 05:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நேரத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து உரையை தொடங்கிய அவர் உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கி உள்ளது.

ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு | Vaccination Children Between The Ages Of 15 To 18

நாம் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவது என்பதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவயைில்லை. இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயராக உள்ளன. குழந்தைகளுக்கு 90,000 கொரோனா படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்ஸிஜன் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதுகாப்பாக செய்யப்பட்டு வருகிறது. உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ஜனவரி 10 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து 15 முதல் 18 வயதினற்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.