டாஸ்மாக் கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைக்கணும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

vanathisrinivasan bjptamilnadu tasmacstores
By Irumporai Sep 18, 2021 10:02 AM GMT
Report

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி செலுத்தும் முகாம் அமைத்து, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று (செப். 18) நடைபெற்றது. அதை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்க்ளை சந்தித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் :

"பெண்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம் மூலம் பரிசோதனை மட்டுமின்றி, சிகிச்சை தேவைப்பட்டால் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் எனக் கூறினார்.

மேலும் 90 சதவீத பெண்களுக்கு நோய் தொடர்பான பரிசோதனை செய்துக்கொள்ளும் உணர்வு இல்லாமல் இருப்பதாக கூறினார் அதன் அடிப்படையில், அவர்களுக்காக இதுபோன்ற முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்களிடையே இன்னமும் கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம், தயக்கம் உள்ளது. பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், டாஸ்மாக் செல்லும் ஆண்களுக்கு டாஸ்மாக்கில் மது அருந்த முடியாதோ என்ற அச்சம் உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைத்தால் விரைவாக தடுப்பூசிகளை செலுத்த முடியும் எனக் கூறினார்.