கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் - குடிமகன்கள் அதிர்ச்சி
கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்களில் சிலர் அச்ச உணர்வில் போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.
இதனிடையே கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் நீலகிரியில் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்று காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
விரைவில் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸூம் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.