மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

vaccination school student masubramaniyan
By Irumporai Dec 29, 2021 06:19 AM GMT
Report

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

15 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3 ஆம் தேதி போரூர் பகுதியில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துவருகிறது. சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 100% முக கவசம் அணிய வேண்டும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை புத்தாண்டு தினம் என்பதால் 17வது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.