கடவுளே...தனுஷூக்கு போய் இப்படி சோதனையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

dhanush vaathi தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் Aishwaryarajinikanth வாத்தி DineshkrishnanDP
By Petchi Avudaiappan Jan 25, 2022 04:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தின் ஒளிப்பதிவாளர் திடீரென படத்தில் இருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என அழைக்கப்படும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அட்ராங்கி ரே படத்தை தொடர்ந்து அவர் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த வாரம் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரே அதிர்ச்சியடைந்தனர். 

இந்த நிலையில் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக வாத்தி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். இதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து டிவிட்டரில் ட்வீட் செய்துள்ள தினேஷ் கிருஷ்ணன், தனுஷ் நடிக்கும் படத்தில் தன்னால் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷுடன் சம்யுக்தா மேனன், சாய் குமார் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.