“பெரட்டி விடு... செதற விடு” - தெறிக்கவிடும் சாதனை படைத்த விஜய் பட பாடல்

Master vaathicoming 250MforVaathiSupermacy
By Petchi Avudaiappan Aug 28, 2021 07:34 PM GMT
Report

 மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையமைத்த இப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் படம் ரிலீசுக்கு முன்னரே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளை கடந்து வாத்தி கம்மிங் பாடல் சாதனை படைத்துள்ளது.

இதனை சமூக வலைத்தளங்களில் #250MForVaathiSupremacy என்ற ஹேஷ்டேக் கொண்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பாடல் 2.6 மில்லியன் லைக்குகளை கடந்த இரண்டாவது பாடல் என்கிற சாதனையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.