அண்ணாமலை உப்பு போட்டு உண்பவராக இருந்தால் ஆதாரத்தை காட்டட்டும் - கொந்தளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உப்பு போட்டு உண்பவராக இருந்தால் ஆதாரத்தை காட்டட்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
கோவையில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கோவையில் 154 மின் மாற்றி அமைக்கப்பட்டு 100% பணி நிறைவடைந்துள்ளது.
13 துணை மின் நிலையங்கள் 144 கோடி ரூபாய் செலவில் பணி துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் கோவை மாவட்டத்தை பொருத்தவரை 203 கோடி ரூபாய் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்றும் வரலாற்றுச் சாதனையாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம் என்ன நடைமுறை உள்ளதோ அதன் படி செயல்படுத்தப்படும்.
மேலும் மின் வாரியத்தின் நிதி நிலைமை தற்போது ஒரு லட்சத்து 59ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்ற கேள்விக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை
ஒரு வருடத்திற்கு 15 ஆயிரம் வட்டி செலுத்தக் கூடிய நிலை மின்சார வாரியத்தில் கடந்த காலங்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் மின்சாரம் கொள்முதல் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சொந்த நிறுவு திறன் 53 மெகாவாட் மட்டுமே வாரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றவை வெளிச்சந்தையில் வாங்கப்படுகிறது.
இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போது ஆய்வு பணியும் நடைபெற்று வருகிறது நம்முடைய உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை 2500 மெகாவாட் இடைவெளி உள்ளது தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
4ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி அதிகரிக்க சிறப்புத் திட்டம் 3 ஆயிரம் மெகாவாட் பம்பு ஸ்டோரேஜ் 2000 மெகாவாட் கேஸ் மூலமாக உற்பத்தி செய்ய திட்டம் செய்யப்பட்டுள்ளது 6800 மெகாவாட் நிலுவையில் உள்ளது அதனையும் எடுத்து செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
216 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அண்ணாமலை கேட்ட கேள்வி குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு , நல்ல விஷயத்திற்கு வந்துள்ளோம் அரிச்சுவடிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
பெரியாருடைய விளக்கத்தை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளேன் .நல்ல மனிதராக உப்பு போட்டு சாப்பிடுவதாக இருந்தால் ஆதாரத்துடன் வெளியிட வேண்டும் .
எந்த வித ஆதாரமும் இல்லாமல் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக பேசுவதற்கு பதில் தர விரும்பவில்லை. ஆதாரம் இருந்தால் அதனை வெளியிட சொல்லுங்கள் என காட்டமாக பேசினார்.