பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

V. K. Sasikala
By Nandhini Jun 01, 2022 09:39 AM GMT
Report

புதுக்கோட்டையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இதன் பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் அதிமுக வலிமை பெறும். சசிகலா பாஜகவுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.

சசிகலா வந்தால் பாஜக வளர உதவியாக இருக்கும், அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார்.

தற்போது பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இப்படி பேசியது அரசியல் வட்டாரசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி | V K Sasikala