விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கப்போகிறேன்... பொறுத்திருந்து பாருங்கள்... - அதிரடி காட்டிய சசிகலா

V. K. Sasikala
By Nandhini Apr 26, 2022 04:40 AM GMT
Report

சிறைத்தண்டனை முடித்து விடுதலையான சசிகலா சென்னை வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர்.

அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. சசிகலா தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார்.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், அதிமுகவில் பரபரப்பு, சலசலப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிகலா, ஆன்மீக பயணம் முடிந்தவுடன் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அரசியல் பயணம் தனியாகவா, இல்லை.... கூட்டணியா... என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கப்போகிறேன்... பொறுத்திருந்து பாருங்கள்... - அதிரடி காட்டிய சசிகலா | V K Sasikala