வி.ஜே. சித்ரா நல்லவளே இல்ல... குடிப்பா... கஞ்சா அடிப்பா... பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போவா... - பகீர் கிளப்பிய தோழி

V. J. Chitra
By Nandhini May 12, 2022 10:12 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன். சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சித்ராவின் தோழி ரேகா நாயர் செய்தியாளர்களிடம் பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது -

சித்ராவுக்கு குடி பழக்கம் உள்ளது. குடி போதையில் சித்ரா நடக்க முடியாமல் இருந்தபோது நான் என் காரில் சித்ராவை அவரது வீட்டில் ட்ராப் செய்தேன். சித்ராவுக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் இருந்தார்கள். அவர்களுடன் சித்ரா டேட்டிங் சென்றுள்ளார்.

அதோடு சித்ராவுக்கு குடி மற்றும் கஞ்சா போன்ற போதை பழக்கமும் உள்ளது. சித்ரா அந்த அவ்வளவுக்கு நல்ல பெண் இல்லை. சித்ராவின் வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருந்தது. அதைப்போலவே அவரது மரணமும் மர்மமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

வி.ஜே. சித்ரா நல்லவளே இல்ல... குடிப்பா... கஞ்சா அடிப்பா... பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போவா... - பகீர் கிளப்பிய தோழி | V J Chitra Rekha Nair

வி.ஜே. சித்ரா நல்லவளே இல்ல... குடிப்பா... கஞ்சா அடிப்பா... பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போவா... - பகீர் கிளப்பிய தோழி | V J Chitra Rekha Nair