சித்ரா கொலையில் 4 பேருக்கு தொடர்பு இருக்கு... - பகீர் கிளப்பிய தோழி - ஷாக்கான ரசிகர்கள்
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 'என் மனைவியின் தற்கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர்.
இவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்கிறது. அதற்கு நான் உடன்படாததால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் என்று ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.
மேலும், அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன்.
சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகை சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது, அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை சித்ரா தோழி நடிகை ரேகா நாயர் தெரிவித்து வருகிறார்.
இது குறித்து ரேகா தற்போது பேசுகையில் -
சித்ராவை பல இடங்களுக்கு கூட்டிக்கொண்டு சென்று உல்லாசமாக இருந்து வந்தான் ஹேம்நாத். சித்ராவும் அதை என்ஜாய் பண்ணிட்டுதான் இருந்தாள். சித்ராவை கொஞ்சம், கொஞ்சமாக தன் உல்லாசத்துக்காக பயன்படுத்தினான் ஹேம்நாத்.
பின்னர், அடுத்தவர்களும் என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான். சித்ராவை உல்லாசத்திற்காக பயன்படுத்தியவர்கள் கூட சித்ராவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். அது யார் என்று எனக்கு தெரிந்தாலும் அதை நான் சொல்லவே மாட்டேன்.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் தற்போது, சித்ராவை ஹேம்நாத் மட்டும் தனியாக கொலை செய்யவில்லை. இந்தக் கொலையில், 4 பேருக்கு தொடர்பு உள்ளது என்று ரேகா நாயர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சித்ராவை கொலை செய்தவர்கள் யார் என்பது ஹேம்நாத்துக்கு தெரியும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.