நடிகை சித்ரா மரணத்தில் டிவி பிரபலத்திற்கு தொடர்பு...? - வெளியான திடுக்கிடும் தகவல்...!
நடிகை சித்ரா மரணத்தில் டிவி பிரபலத்திற்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் திடுக்கிடும் தகவல் கூறியிருக்கிறார்.
நடிகை சித்ரா மரணம்
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.
ஜாமீனில் வெளி வந்த ஹேம்நாத்
60 நாட்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் சலசலப்பை கிளப்பினார்.
இதனையடுத்து, ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, சித்ராவின் நண்பர் சையத் ஹோகித் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டிவி பிரபலத்திற்கு தொடர்பு
இந்நிலையில் சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் மீண்டும் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன். மெஸ் ஒன்றின் உரிமையாளர் மற்றும் விஜய் டிவி விஜே ஒருவர் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள் என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan