Tuesday, Apr 29, 2025

நடிகை சித்ரா கஞ்சா அடிக்கிறா,குடிக்கிறானு சொல்றாங்க - அவன் நல்லவனா? குமுறும் தாய்..!

Tamil Nadu Police V. J. Chitra
By Thahir 3 years ago
Report

கஞ்சா அடிக்கிறா,குடிக்கிறானு சொல்றாங்க அவன் நல்லவனா? என சீரியல் நடிகை சித்ராவின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகையான சித்ரா உயிரிழந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தற்போது அவர் குறித்தான தகவல்கள் வெளியாகி திரைதுறையை பரபரப்புக்குள்ளாகி வருகிறது.

சித்ரா வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை நாள் தோறும் பேட்டியாக மீடியாக்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் பெற்றோர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பேட்டியில் ,சித்ராவின் மரணத்தில் இருந்து தங்களால் மீண்டு வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அவருடைய நினைவுகள் தன்னால் சொல்ல முடியவில்லை என்றும் சித்ரா தனக்காக செய்த அனைத்து செயலையும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

என் பிறந்த நாள் எனக்கே தெரியாது.ஆன என் பிறந்த நாள் தேதி அவுங்க தாத்தா எழுதி வச்சுருந்தத பார்த்த அன்று கேக் வெட்டுவா.

வெளிநாட்டுக்கு சென்றார் எனக்கு கம்மல்,முக்குத்தி எல்லாம் வாங்கிட்டு வருவா எனக்கு ஒன்னொன்னா யோசிச்சு யோசிச்சு செய்வா.

சித்ரா பற்றி நிறைய மெமரிஸ் இருக்கு.சொல்ல முடியல அவளால எனக்கு பெருமையா இருந்துச்சு. என் பெருமையெல்லாம் போயிடுச்சு கடைசி வரைக்கும் இருப்பானு நினைச்சேன்.

சித்ராவ கொன்னவங்களு்க்கு தண்னை கிடைச்சாதான் துாங்குவேன் என அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சித்ரா உயிரிழந்த அன்று இரவு இருவருக்கும் இடையில் பணம் தொடர்பாக சண்டை நடந்துருக்கு. அதில் என் மகளை ஹேமந்த் அடிச்சு கொன்னுட்டான்.காப்பாத்தனும்னா காப்பாத்தியிருக்கலாம்.

அவன் தான் கொன்னுட்டான்.எல்லாரும் சப்போர்ட்டா பேசுறாங்க.ஆனா அரசாங்கம் இதை ஏன் வெளியில காட்ட மாட்றாங்கன்னு தெரியல என்று கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.