கனவுகள் நிறைந்த கண்களோடும் கவலைகள் நிறைந்த இதயத்தோடும் ‘’ - மக்களுக்காக இறையன்பு எழுதிய உருக்கமான கடிதம்

letter iraianbuias districcollector
By Irumporai Sep 15, 2021 05:19 AM GMT
Report

மக்கள் பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தன் கைப்பட தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் குவிந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள், நடவடிக்கை எடுக்காததால் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், கோட்டையில் மக்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனப்பதாக தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, விரிவான ஆய்வின் மூலம் மாவட்ட அளவிலான பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க ஆட்சியர்கள் முனைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.