காதலியை கவர சிங்க கூண்டுக்குள் நுழைந்த நபர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

Viral Video Death World
By Karthikraja Jan 04, 2025 11:30 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 காதலியை கவர சிங்க கூண்டுக்குள் நுழைந்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்க பூங்கா

காதலியை கவர பலரும் தங்களது உயிரை பணயம் வைத்து பல சாகசங்களில் ஈடுபவது உண்டு. அதே போல் உஸ்பெகிஸ்தானில் ஒரு நபர் செய்த செயல் சோகத்தில் முடிந்துள்ளது. 

uzbekistan lion

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் தனியார் சிங்க பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு 44 வயதான எஃப்.இரிஸ்குலோவ் என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார்.

உயிரிழப்பு

இவர் விலங்குகளுடன் நெருக்கமாக இருப்பதை காட்டி தனது காதலியை கவர முயற்சித்துள்ளார். இதற்காக கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், 3 சிங்கங்கள் உள்ள கூண்டிற்குள் சென்றுள்ளார். அதை தனது செல்போனில் படம் பிடித்தவாறே உள்ளே சென்றுள்ளார்.

முதலில் சிம்பா என்று அழைத்து கொண்டே அந்த சிங்கங்களை கொஞ்ச முற்பட்டுள்ளார். அமைதியாக அவரை நெருங்கிய சிங்கம் ஒன்று அவரை தாக்க தொடங்கியுள்ளது. அதன் பிறகு மற்ற இரு சிங்கங்களும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளது. 

இந்த எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க முடியமால் அவர் அலறும் சத்தம் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. சிங்கங்கள் சேர்ந்து அவரை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.