பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது - உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Narendra Modi India
By Nandhini Sep 16, 2022 08:52 AM GMT
Report

பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. உச்சி மாநாடு கடைசிய கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு கொரோனா காரணமாக உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கிளம்பி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரை சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் வரவேற்றார்.

ஒரே மேடையில் சீன அதிபருடன் பிரதமர் மோடி

இந்த உச்சி மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் உலகத் தலைவர்களை வரவேற்றார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு, முதல் முறையாக சீன அதிபருடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.

uzbekistan-india-modi-speech

மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்நிலையில், ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் -

உலகம் கோவிட்-19 தொற்றை இந்தியா முறியடித்து வருகிறது. கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளாவிய வினியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று நம் நாட்டில் 70,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் இருக்கின்றன என்றார்.