ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - ஒரே மேடையில் முதல் முறையாக சீன அதிபருடன் பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ஒரே மேடையில் முதல் முறையாக சீன அதிபருடன் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. உச்சி மாநாடு கடைசிய கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு கொரோனா காரணமாக உச்சி மாநாடு நடைபெறவில்லை.
உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கிளம்பி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரை சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் வரவேற்றார்.
ஒரே மேடையில் சீன அதிபருடன் பிரதமர் மோடி
இந்நிலையில், இந்த உச்சி மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் உலகத் தலைவர்களை வரவேற்றார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு, முதல் முறையாக சீன அதிபருடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Uzbekistan president welcomes world leaders for #SCOSummit. Watch! pic.twitter.com/YQ8z2x0UZU
— WION (@WIONews) September 16, 2022