இங்கு பிரியாணி சாப்பிட்டால் பாலியல் சக்தி அதிகரிக்கும்? கடைப்பிடிக்கும் மக்கள்!
பிரியாணி சாப்பிட்டால் பாலியல் சக்தி அதிகரிக்கும் என பரவலான மக்களால் நம்பப்படுகிறது.
புலாவ் (Plov)
உஸ்பெகிஸ்தான் தேசிய உணவாக புலாவ் (Plov) உள்ளது. மேலும் இந்த உணவு பாலுணர்வைத் தூண்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.
எனவே அந்நாட்டில் கருத்தரிக்க உகந்த நாளாக கருதப்படும் வியாழக்கிழமைகளில் இந்த உணவு உண்ணப்படுகிறது. புலாவ் இந்த நாட்டில் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது உட்கொள்ளப்படுகிறது. குடும்ப விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இன்றியமையாத இடத்தையும் புலாவ் பிடித்துள்ளது.
பாலியல் சக்தி?
இதுகுறித்து உணவு வரலாற்றில் ஆர்வமுள்ள உஸ்பெக் சுற்றுலா வழிகாட்டி நிலுஃபர் நூரிடினோவா, புலாவ் முதன்முதலில் 'மாவீரன் அலெக்சாண்டர்' கேட்டுக்கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டது.
மத்திய ஆசியாவில் தனது படையெடுப்புகளின்போது ராணுவ வீரர்கள் நல்ல வலுவுடன் தாக்குப்பிடிக்கும் விதமாக இருக்கும்படியான ஒரு திருப்திகரமான உணவை உருவாக்கும்படி அவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக புலாவ் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்குள் புலாவ் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆனால் அதை நிரூபிப்பதற்கான வரலாற்று பதிவுகள் நம்மிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.