நெல்லை அருகே கடலில் மேகங்கள் நீரை உறிஞ்சிய அதிசய வீடியோ வைரல்...!
நெல்லை அருகே கடலில் மேகங்கள் நீரை உறிஞ்சிய அதிசய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.
இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மேகங்கள் நீரை உறிஞ்சிய அதிசய வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கடலில் மேகங்கள் கடல் நீரை உறிஞ்சியது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
A view of clouds absorbing water in the Koopapani sea near Uvari in Nellai district. pic.twitter.com/q1TalP5uDG
— T2TNEWS (@T2T_News) December 8, 2022