இந்தியா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆளப்படும்
இந்தியா அரசியல் அமைப்பு சட்டபடியே ஆளப்படும்,ஷரியத் சட்டப்படி இல்லை என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 55 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது. நமது பிரதமர் மோடி, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார். அந்த மகளுக்கான மாண்பை உறுதி செய்யவே நமது தேசம் அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியத் சட்டத்தால் அல்ல எனக் கூறினார்.
இது புதிய இந்தியா. உலகளவில் பிரபலமான தலைவரைப் பிரதமராகக் கொண்ட புதிய இந்தியா. இந்த புதிய இந்தியா உலகம் இருக்கும்வரை அரசியல் சாசனப்படி மட்டுமே ஆளப்படும்.
தலிபான் மனப்பான்மை கொண்ட சில மதவெறியர்களின் எண்ணங்கள் என்றுமே நிறைவேறாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.