வீட்டு வேலை செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர்..! - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 29, 2022 07:13 AM GMT
Report

வீட்டு வேலை செய்யும் பெண்ணை, வீட்டு உரிமையாளர் அடித்து துன்புறுத்திய சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை அடித்து துன்புறுத்தி வீட்டு உரிமையாளர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நொய்டாவில் உயர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் வேலைக்கு வந்த பெண் ஒருவரை லிஃப்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்படுகிறார்.

வீட்டு உரிமையாளர் லிப்டிலிருந்து அவளை வெளியே இழுக்கும்போது வீட்டு உதவியாளர் லிஃப்ட் சுவர்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதன் பிறகு அப்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற உரிமையாளர் அவளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வீட்டுப் பணிப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

uttarpradesh-noida-house-worker-attack-video-viral