உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் : விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் வாக்குபதிவு
உத்தரகாண்ட், கோவா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவாவிலும் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. அங்கு பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.