குடும்பத் தகராறு - பெற்றோரும் மகனும் எடுத்த விபரீத முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப தகராறில் பெற்றோர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதால், மனமுடைந்த மகன் அவர்களது சமாதியில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகேசன், சாந்தாமணி தம்பதியினருக்கு சூர்யா, ரவிந்திரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணம் செய்து வைப்பது காரணமாக கடந்த 21-ம் தேதி மூத்த மகனுக்கும் பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியதில், மனமுடைந்த பெற்றோர் சுடுகாட்டிற்கு சென்று பூச்சி மருந்து குடித்து அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனை கேட்டு துடித்து போன அவர்களது மூத்த மகன், அவர்கள் சமாதிக்கு அருகேயே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறு தகராறால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.