எச்சில் துப்பி சப்பாத்தி செய்த சமையல்காரர் - அதிர்ச்சி வீடியோ

uttarpradesh Chef split saliva
By Anupriyamkumaresan Oct 19, 2021 07:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில், சமையல்காரர் எச்சில் துப்பி தொட்டு சப்பாத்தி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதையடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் சமையல்காரர் ஒருவர் எச்சில் துப்பி சப்பாத்தி செய்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த சமையல் காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி அதை அடுப்பின் மீது வைத்து சூடுகிறார். இதனை கடைக்கு சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எச்சில் துப்பி சப்பாத்தி செய்த சமையல்காரர் - அதிர்ச்சி வீடியோ | Uttarpradesh Chef Split Saliva To Cook Chapathi

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீதும் சமையகாரர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஞ்சவதி பகுதியின் அஹிம்சா வாதிகாவில் அமைந்து இருக்கும் சிக்கன் பாயிண்ட் என்ற உணவகத்தில் தமீசுத்தீன் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும், தினசரி தந்தூரி ரொட்டி சுடுவது அவரது வேலை எனவும் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், எச்சில் துப்பியது எதற்கு என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.