உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் ; 11 மணி நிலவரப்படி 23.03% வாக்குகள் பதிவு

india upassemblyelections 2ndphase pollingstarts 11amturnout23%
By Swetha Subash Feb 14, 2022 06:59 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

உத்தரபிரதேச மாநிலத்தில் 2-ம் கட்டமாக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், திங்கள்கிழமையான இன்று 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட தேர்தலில் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.08 கோடி ஆண் வாக்காளர்கள், 0.94 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 1,269 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

மக்கள் வாக்களிப்பதற்காக 17 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சஹரான்பூர், மொராதாபாத், ராம்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 5 அமைச்சர்கள் மீண்டும் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும்,

சஹாரன்பூரில் காலை 9 மணி வரை 9.77 சதவீதமும்,

பிஜ்னூரில் 10.01 சதவீதமும்,

ராம்பூரில் 8.37 சதவீதமும்,

புடானில் 9.14 சதவீதமும்,

பரேலியில் 8.36 சதவீதமும்,

ஷாஜஹான்பூரில் 9.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.