உத்தரகாண்ட் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ..!

cancel 12th exam uttarkand
By Anupriyamkumaresan Jun 02, 2021 01:43 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என பலரது கேள்வியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களிலும் 12-ம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ..! | Uttarkand 12Th Exam Cancel