கிராமத்தையே அடித்து சென்ற வெள்ளம்; 50 பேர் மாயம் - அதிர்ச்சி வீடியோ!

Viral Video Uttarakhand Rain
By Sumathi Aug 05, 2025 01:29 PM GMT
Report

திடீர் வெள்ளத்தில் 50க்கும் அதிகமானவர்கள் மாயமாகியுள்ளனர்.

திடீர் வெள்ளம்

உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகியில் உத்தரகாசி மாவட்டம் தாரலி கிராமத்தில் திடீர் மேகவெடிப்பால் குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

கிராமத்தையே அடித்து சென்ற வெள்ளம்; 50 பேர் மாயம் - அதிர்ச்சி வீடியோ! | Uttarakhand Village Devastated Flood Viral Video

இதனால் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து மக்கள் அடித்து செல்லப்பட்டனர். மண், பாறைகளுடன் வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் கட்டடங்கள் சேதமாகின. தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இதனால் புனித ஸ்தலமான கங்கோத்ரி தாம் நகருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது வெள்ளம் அல்ல... வீட்டிற்கு வந்த 'கங்கை அன்னை' - குஷியில் காவல்துறை அதிகாரி

இது வெள்ளம் அல்ல... வீட்டிற்கு வந்த 'கங்கை அன்னை' - குஷியில் காவல்துறை அதிகாரி

50 பேர் மாயம்

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,

‛‛தாரலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அதிக வலியை கொடுத்துள்ளது. சீனியர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். மீட்பு பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகிகள் மீட்புபணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் பிரார்த்தனை செய்து வருகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.