உத்தரகாண்ட் சுரங்க விபத்து...அதானி குழுமத்திற்கு தொடர்பா..?
உத்தரகாண்ட் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நவ்யுகா நிறுவனம், அதானி குழுமத்துக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்த குழுமம் விளக்கமளித்துள்ளது.
உத்தரகாண்ட் விபத்து
நாட்டை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்தின் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. சுரங்கப் பாதையில் பக்கவாட்டில் துளையிடும் பணியில் இதுவரை 51.5 மீட்டர் அளவுக்கு துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்ததுள்ள நிலையில், இன்னும் 5 முதல் 6 மீட்டர் தொலைவே எஞ்சியுள்ளது.

விரைவில் அதை நிறைவு செய்வோம் என்றும் எந்தவித இடையூறுமின்றி துளையிடும் பணி நிறைவடைந்தால் இன்றைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் எனவும் மீட்புக் குழு நம்பிக்கை தெரிவித்ததுள்ளது.
அதானி குழுமத்திற்கு பாங்கா..?
இந்நிலையில், இந்த சுரங்கப்பாதை பணியில் எந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்ற கேள்வியினை பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி எழுப்ப அக்கேள்விகள் கவனம் பெற்றன. இதற்கிடையியல், நவ்யுகா என்ற நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த பணியில், அதானி குழுமத்திற்கு தொடர்பிருப்பதாக பல செய்திகள் ஊடங்களில் வெளியாக துவங்கின.

இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்க கட்டுமான பணியில் ஈடுபடவில்லை என்றும் கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் பங்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.