உத்தராகண்ட் சிறையில் பரபரப்பு : ஒரு பெண் உட்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ்

HIV Symptoms
By Irumporai Apr 10, 2023 05:09 AM GMT
Report

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கைதிகளுக்கு எச்.ஐ,வி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியில் உள்ள சிறையில் கைதிகளுக்கு எச்.ஐவி வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதில் ஒரு பெண் கைதிக்கும் எச்.ஐவி பாதிப்பு இருப்பது மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் சிறையில் பரபரப்பு : ஒரு பெண் உட்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் | Uttarakhand Have Been Diagnosed With Hiv

கைதிகளின் சிகிச்சை நிலவரம் குறித்து பேசிய டாக்டர், எச்ஐவி நோயாளிகளுக்காக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. என்றுகுறிப்பிட்டார் .  

பரபரப்பு நிலை 

மேலும், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போது ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.