பதவியை ராஜினாமா செய்த உத்தரகாண்ட் ஆளுநர்..!

babyranimaurya uttarakhandgovernor
By Petchi Avudaiappan Sep 08, 2021 08:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில பாஜக உறுப்பினராக இருந்த பேபி ராணி மவுர்யா கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக் காலம் மட்டுமே முடிந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பாஜக மேலிடத்தின் உத்தரவுப்படி தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக பதவி விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.