உத்தரகாண்ட்டில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்
உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு 65 சதவீத சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுலான் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இந்நிலையில், உத்தரகாண்ட்டில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புக்குழுவினர் உயிரை பனையம் வைத்து காப்பாற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.