உத்தராகண்ட் முதல்வருக்கு கொரோனா: பிரதமரைச் சந்திக்க இருந்த நிலையில் தொற்று உறுதி

covid minister chief Singh Rawat
By Jon Mar 23, 2021 04:51 PM GMT
Report

உத்தராகண்ட் முதல்வர் திரத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் முதல்வர் மாற்றப்பட்டு திரத் சிங் ராவத் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகுபெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது தொடர்பாகவும், ரேஷன் அட்டைகளுக்காக அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்ச்சைக் கருத்துகளைக் கூறியிருந்தார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திரத் சிங் ராவத் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியா நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், 21-ம் தேதி அன்று மட்டும் 46000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.