எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி, முதல்வர் மாற்றம் - உத்தராகண்ட் பாஜக கலகத்தின் பின்னணி என்ன?
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏக்கல் போர்க்கொடி தூக்கியதால் முதல்வர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு உத்தராகண்ட் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் முதல்வர் திடீரென மாற்ற காரணம் என்ன என பலரும் யூகித்து வருகின்றனர். இந்நிலையில் உட்கட்சி பூசல்களை சமாளிக்கவே பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் மத்தியில் முதல்வருக்கு செல்வாக்கு இல்லை என்றும் ராவத் தலைமையில் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்தித்தால் பாஜக தோற்றுவிடும் என எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தற்போது உத்தராகண்ட் எம்.பி திரத் சிங் ராவத் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் தோல்விகளை ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே பாஜக நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியின் முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.