200 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து - 7 பேர் பலி!
பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
உத்தரகாண்ட், அல்மோராவின் துவாரஹாட் பகுதியிலிருந்து நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் மொத்தம் 19 பயணிகள் இருந்தனர்.
7 பேர் பலி
விபத்து நடந்த இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குவர். காயமடைந்தவர்களில் 10 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர்.
தொடர்ந்து பேருந்தை வளைவில் திருப்ப முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு விரைவாகவும், தடையின்றியும் உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.