முத்தம் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்...! - ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறிய வாலிபர்...!

Uttar Pradesh
By Nandhini 1 மாதம் முன்

உத்திரப்பிரதேசத்தில் இளைஞரின் உதட்டை ஒரு பெண் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்

உத்திரப்பிரதேச மோநிலம், மீரட்டில் கடந்த 4-ம் தேதி, வயல் வேலைக்குச் சென்ற பெண்ணை ஒரு நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அப்பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளார்.

இதனையடுத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட அப்பெண் முதலில் அந்த நபருக்கு முத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, அப்பெண்ணின் பேச்சில் மயங்கிய அந்த வாலிபர் முத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த இளம்பெண் முத்தம் கொடுக்க முயன்ற போது வாலிபரின் உதட்டை பயங்கரமாக கடித்துள்ளார்.

வலியால் அந்த நபர் கதறி அலறி துடித்தார். இவரின் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடி வந்துள்ளனர். அந்த வாலிபரின் உதட்டிலிருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதனையடுத்து, அந்த வாலிபரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

இது தொடர்பாக அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அந்த வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

uttar-pradesh-young-girl-who-bit-her-lip-and-spat

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.