பயணிகளுக்கு வழங்க வேண்டிய உணவுக்காக காய்கறிகளை காலால் கழுவிய நபர் - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 27, 2022 11:42 AM GMT
Report

காய்கறிகளை காலால் கழுவிய நபர் 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள ஐஷ்பாக் ரயில் நிலையத்தில் தன் இரு கால்கள் மூலம் ஒரு நபர் காய்கறிகளை கழுவிக்கொண்டிருக்கிறார்.

சுகாதாரமற்ற முறையில் உணவை சுத்தம் செய்து கொண்டிருந்தவர், பயணிகளுக்கு வழங்க வேண்டிய உணவை தயார் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் செய்யும் இந்த வேலைகளை அங்கிருந்தவர் யாரோ மறைமுகமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

uttar-pradesh-viral-video-washes-vegetables-feet