நபர் ஒருவரை கொடூரமாக அடித்தே கொலை செய்த உ.பி. போலீசார் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Attempted Murder Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உத்திரப்பிரதேசத்தில், நபர் ஒருவரை கொடூரமாக அடித்தே போலீசார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடித்தே கொலை செய்த உ.பி. போலீசார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லியில், கைரானா PSக்கு உட்பட்ட வயலில் கயூர் என்ற நபரை கடந்த நவம்பர் 21 இறந்து கிடந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கயூர் என்ற நபரை போலீசார் கொடூரமாக தாக்கியப்படி வயலில் இழுத்துச் செல்கின்றனர். இதை அங்கிருந்தவர் யாரோ மறைமுகமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனையடுத்து, அடித்ததாகக் கூறப்படும் வீடியோ வெளியானதால், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

uttar-pradesh-viral-video-murder