சாலையில் தேங்கிய மழைநீரில் பயணிகளோடு விழுந்து ஆட்டோ விபத்து - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச கனமழை
உத்திர பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. உத்திரபிரதேச சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கி சாய்ந்து விழுந்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஆட்டோவில் சிக்கிக்கொண்ட பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The so called UP model by #YogiAdityanath #UttarPradesh pic.twitter.com/KMhAdI2e7V
— titto jose (@tittojose9810) October 11, 2022