திடீரென சாக்கடை ஆற்றில் கார் விழுந்து விபத்து - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh Accident
By Nandhini Oct 11, 2022 06:20 AM GMT
Report

உ.பி.யில் கொட்டும் கனமழையில் திடீரென ஓடிக்கொண்டிருந்த கார் சாக்கடை ஆற்றில் விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உ.பி.யில் கனமழை

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

uttar-pradesh-viral-video-flood

சாக்கடையில் விழுந்த கார்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலம், மீரட்டில் சாலையில் தண்ணீர் தேங்கியதால், ஓடிக்கொண்டிருந்த கார் சாக்கடை ஆற்றில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.

சாக்கடை நீரில் கார் முழுவதுமாக மூழ்கியது. காருக்குள் கார் டிரைவர் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக சாக்கடையில் இறங்கி காரை கயிற்றின் மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். துரிதமாக செயல்பட்டு டிரைவரின் உயிரையும் காப்பாற்றினர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.