நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

Viral Video Uttar Pradesh
By Nandhini 1 மாதம் முன்
Report

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்ணின் சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்

உத்திரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ம் தேதி இரவு பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில், முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டு கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டார் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். ஆனால், போலீசாரால் அந்த பெண்ணை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், அந்த நிர்வாணப் பெண்ணுக்கு சுமார் 25 வயதுடையவர். வீட்டு வாசலிலிருந்து அந்தப் பெண் வெளியே சென்றபோது, அப்பெண் பின்னால், 2 பைக்கில் வந்த சிலர் பின்தொடர்ந்து சென்றனர் என்றார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் அந்த நிர்வாணப் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.      

uttar-pradesh-viral-video-a-young-girl

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.