Viral Video : ஒரு வேளை பேய்யா இருக்குமோ... ஆளே இல்லாமல் ஓடிய டிராக்டர்... - மக்கள் ஓட்டம்....!

Viral Video Uttar Pradesh
By Nandhini Mar 01, 2023 02:31 PM GMT
Report

உ.பி.யில் ஆளே இல்லாமல் ஓடிய டிராக்டரைப் பார்த்து மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆளே இல்லாமல் ஓடிய டிராக்டர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

உ.பி.யின் பிஜ்னோர் கோட்வாலியில் ஆளே இல்லாமல் நிறுத்தப்பட்ட டிராக்டர் திடீரென ஸ்டார்ட் ஆகி ஷூ ஷோரூமுக்குள் நுழைந்தது.

அப்போது, அந்த டிராக்டர் ஷோரூமின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. ஸ்டார்ட் செய்யாமல் நின்றுக்கொண்டிருந்த டிராக்டர் திடீரென ஓடியதால் அங்கிருந்த சில மக்கள் பேய்கள் கூறி அங்கிருந்து ஓடினர். ஷோரூமில் இருந்தவர்கள் விரைந்து ஓடி வந்து அந்த டிராக்டை நிறுத்தினர்.

தற்போது இது தொடர்பாக பிஜ்னோர் கோட்வாலி நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஒரு வேளை பேய்யாக இருக்குமோ.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-viral-video