ரூ.6.73 லட்சம் மதிப்புள்ள நகையை நூதனமாக திருடிய பெண்... - வைரலாகும் சிசிடிவி காட்சி...!

Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உ.பி.யில் ரூ.6.73 லட்சம் மதிப்புள்ள நகையை நூதனமாக திருடிய பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

நகை நூதனமாக திருடிய பெண்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், கோரக்பூரின் கான்ட் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோல்கர் பகுதியில் உள்ள பல்தேவ் பிளாசாவில் ஒரு நகைக்கடையில், சிவப்பு நிறத்துடன் ஒரு பெண் ₹6.73 லட்சம் மதிப்புள்ள நகையுடன் திருடி தப்பியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

தற்போது இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

uttar-pradesh-viral-video