உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம் - குளத்தில் டிராக்டர் - டிராலி கவிழ்ந்து விபத்து; 26 பேர் மரணம் - பலர் படுகாயம்

Uttar Pradesh Accident Death
By Nandhini 1 மாதம் முன்

கான்பூரில் உள்ள குளத்தில் நேற்று டிராக்டர்-டிராலி விழுந்து 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் 26 பேர் மரணம்

உத்திரபிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26க்கும் மேற்பட்டோர் டிராக்டர்-டிராலி பயணம் செய்தனர்.

அப்போது, டிராக்டர் டிராலி சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென குளத்தில் குப்புற கவிழ்ந்து குளத்தில் மூழ்கியது. இந்த விபத்தில் டிராக்டர்-டிராலி பயணம் செய்த 26 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை அப்பகதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிராக்டரில் சென்ற 26 பேர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. 

uttar-pradesh-tractor-trolley-accident-26-killed