திருட சென்ற இடத்தில் கதவின் இடையில் சிக்கிய தலை - சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்த திருடன்...!

Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள விசைத்தறி மையத்தில் திருட முயன்ற திருடன் ஒருவர் கதவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடச் சென்ற இடத்தில் தலை சிக்கி உயிரிழந்த திருடன்

வாரணாசியின் சாரநாத் பகுதியில் உள்ள டானியல்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை, நிஜாம் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி மையம் கடந்த 2 நாட்களாக வேலை இல்லாததால் மூடப்பட்டிருந்தது.

இந்த விசைத்தறி மையத்தின் கதவின் மேல்புறத்தில் பூட்டு இருப்பது தெரியாமல் ஜாவேத் உள்ளே நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது, 2 கதவுக் கற்றைகளுக்கு நடுவே ஜாவேத்தின் தலை சிக்கிக் கொண்டது.

திருட சென்ற இடத்தில் கதவின் இடையில் சிக்கிய தலை - சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்த திருடன்...! | Uttar Pradesh Thief Varanasi Dies

அவரது உடல் முழுவதும் வெளியே இருந்த நிலையில் அவரது தலை கதவின் உள்ளே சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் இதைப் பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஜாவேத் (30) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.