கோவில்,மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி..!
உத்தர பிரதேசத்தில் உள்ள கோவில்,மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் இருந்து ஒலிப்பெருக்கிகளை அகற்றினர் அம்மாநில போலீசார்.
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் அண்மையில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவின் போது இருதரப்பு மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் டெல்லி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.இதையடுத்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையும்,அக்சய திருதி பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இரு பண்டிகைகளும் ஒரே நாளில் வருவதால் எந்த விதமான அசம்பாவிங்களும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கோவில்,மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவை அடுத்து உத்தர பிரதேசம் முழுவதும் உள்ள கோவில்,மசூதிகளில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் இருந்து ஒலிப்பெருக்கிகளை போலீசார் அகற்றினர்.
இதுவரை 600க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.