தந்தூரி ரொட்டியில் எச்சிலை துப்பி தீயில் சுட்ட நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 20, 2023 01:58 PM GMT
Report

தந்தூரி ரொட்டியில் எச்சிலை துப்பி தீயில் சுட்ட நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள மதீனா ஹோட்டலில் முகமது தஹிசுதீன் என்ற ஹோட்டல் ஊழியர் தந்தூரி ரொட்டியில் எச்சிலையை துப்பிவிட்டு சுட்டுக்கொண்டிருந்தார். இதை அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வந்தனர்.

வீடியோ வைரலானதையடுத்து, அந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

uttar-pradesh-tandoori-rotis-madina-hotel