சாலையில் நின்ற மாட்டை காரில் கடத்திய மர்ம நபர்கள் - அதிர்ச்சி வீடியோ...!
உ.பி.யில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த பசு மாட்டை காரில் கடத்திய மர்ம நபர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டை காரில் கடத்திய மர்ம நபர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரில் 2 மர்ம நபர்கள் இரவு இருட்டில் காரில் வந்து சாலையில் நின்றிருந்த மாட்டை கடத்திச் சென்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

बताइए, मुजफ्फरनगर में दो लोग रात के अंधेरे में आए और रोड पर खड़ी गाय को मारुति 800 कार में लेकर चले गए।#UPNews #uttarpradesh pic.twitter.com/Y0G0X6tC2P
— Banti Soni (@_bantisoni) February 23, 2023