வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து செயின் பறித்த மர்ம நபர்கள் - வைரலாகும் சிசிடிவி வீடியோ...!
உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் வீடு புகுந்து செயின் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடு புகுந்து செயின் பறித்த மர்ம நபர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணுக்கு பரிசு கொடுப்பதாக கூறி, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் செயினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தற்போது, இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
