கதவுகள் இல்லாத கழிவறை... - ரூ.10 லட்சம் செலவு... - வீடியோ வைரல்.. - கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 23, 2022 06:25 AM GMT
Report

உ.பி.யில் தடுப்பு சுவர், கதவுகள் இல்லாமல் திறந்த வெளி கொண்ட ஒரே கழிவறை கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதவுகள் இல்லாத கழிவறை

உத்திரபிரதேச மாநிலத்தில், பஸ்தி மாவட்டத்தில் உள்ள கவுரா துந்தா கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஒரே குளியலறையில் இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும் கழிவறையின் வீடியோக்கள், புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. 

இந்த கழிவறைகளை கட்ட ரூ.10 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கதவு கூட இல்லாத இந்த கழிவறைக்காக 10 லட்ச ரூபாயை செலவுசெய்துள்ளார்கள் என்று  அதிர்ச்சி அடைந்து இந்த கழிவறையை அமைத்தவர்கள் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் உ.பி. அரசை விமர்சித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

uttar-pradesh-single-restroom-with-open-doors